10. 02. 2017 இன்றைய ராசிப் பலன்கள்

மேஷம்

நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் டென்ஷன் வந்துப் போகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

ரிஷபம்

துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அரசு காரியங்கள் முடியும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

மிதுனம்

கணவன்&மனைவிக்குள் அன்யோனம் பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

கடகம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

சிம்மம்

குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

கன்னி

கணவன்&மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

துலாம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

விருச்சிகம்

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

தனுசு

சந்திராஷ்டமம் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

மகரம்

பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

கும்பம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். சகோதரி உதவுவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

மீனம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்