07. 02. 2017 இன்றைய ராசிப் பலன்கள்

மேஷம்

தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

ரிஷபம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். வராது என்றிருந்த பணம் வரும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

மிதுனம்

ராசிக்குள் சந்திரன் செல்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். பேச்சில் காரம் வேண்டாம். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

கடகம்

சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

சிம்மம்

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைவரை சந்திப்பீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

கன்னி

உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

துலாம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்&மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

விருச்சிகம்

சந்திராஷ்டமம் தொடங்குவதால் வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

தனுசு

மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

மகரம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

கும்பம்

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

மீனம்

பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனம் பழுதாகி சரியாகும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே