யாழில் தேசிய பொங்கல் விழா! வடதுருவமும் தென் துருவமும் சந்தித்தன

யாழ்ப்பாணம், பலாலியில் இன்று தேசிய பொங்கல் விழா நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பலாலி கிழக்கில் அமைந்துள்ள இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இனிதே நடைபெற்றன.

நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து தற்போது யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கலை, கலாச்சார நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

மேலும் நிகழ்வில், பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வையர், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்வார் என இறுதிவரை எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த போதிலும் அவர் வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை வட, தென் துருவங்களாக இருந்த ரணில் - சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து கைலாகு கொடுத்த காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.