05. 02. 2017 இன்றைய ராசிப் பலன்கள்

மேஷம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: மிண்ட் கிரே, வைலெட்

ரிஷபம்

ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

மிதுனம்

திடீர் பயணங்களும், செலவுகளும் வந்து நீங்கும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வரும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

கடகம்

அதிரடியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

சிம்மம்

புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

கன்னி

கடந்த இரண்டு நாட்களாக இருந்த தயக்கம், காரியத் தாமதம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

துலாம்

சந்திராஷ்டமம் தொடங்குவதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம் மஞ்சள்

விருச்சிகம்

தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

தனுசு

எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

மகரம்

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

கும்பம்

நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

மீனம்

சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்