அந்தரங்கத்தினுள் ஐஸ்கட்டியை சொருகினார்!! தந்தையால் கர்ப்பமான 12 வயதுச் சிறுமியின் வாக்குமூலம்

மும்பையில், வளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட 12 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

வளர்ப்பு தந்தையால் கற்பழிப்பு
மும்பை செம்பூரை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வருகிறார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் பிறந்த 12 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அந்த சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் வேளையில், தாயின் இரண்டாவது கணவர் அவளை பல்வேறு சந்தர்ப்பங்களில் மிரட்டி கற்பழித்து இருக்கிறார்.

பயத்தில் அந்த சிறுமி வளர்ப்பு தந்தையால் தனக்கு நேர்ந்து வரும் கொடுமையை பெற்ற தாயிடம் கூட தெரிவிக்க முடியாமல் தவித்து வந்தாள். இதனால் அவள் 12 வயதிலேயே தாய்மை அடைய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டாள். தான் கர்ப்பம் அடைந்திருப்பது கூட தெரியாமல் அந்த சிறுமி தனது வயிற்றில் கருவை சுமந்தாள்.

கர்ப்பம்

7 மாதம் வரையிலும் தன் வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறோம் என்பது சிறுமிக்கு தெரியவில்லை. வயிறு பெரிதானதை கவனித்த அவளது தாய் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் கொண்டு போய் காண்பித்த போது தான் சிறுமி கர்ப்பம் அடைந்து இருக்கும் விவகாரம் தெரியவந்தது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தாய் அவளிடம் விசாரித்த போது, வளர்ப்பு தந்தையின் காம பசிக்கு பலியானதை கூறி கதறி அழுதாள்.

பலதடவைகள் தாயார் இல்லாத போது தான் கற்பழிக்கப்பட்டதாகவும் முதற்தடவை தன்னை கற்பழித்த போது கடும் வலி ஏற்பட்டு இரத்தம் பெருகி தான் வேதனை தாங்காது கத்திய போது சிறிய தந்தை தனது அந்தரங்கத்தினுள் ஐஸ்கட்டிகளைச் சொருகி இரத்தப் பெருக்கை நிறுத்தியதாகவும் சிறுமி கூறியுள்ளாள்.
ஆண் குழந்தை பிறந்தது

இதையடுத்து சிறுமியின் தாய் இரண்டாவது கணவர் மீது செம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அந்த நபரை கைது செய்தனர். சிறுமியின் வயிற்றில் வளர்ந்த கரு அழிக்க முடியாத நிலையை தாண்டி வளர்ந்ததை அடுத்து சிறுமி டோங்கிரியில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டாள்.

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று சிறுமிக்கு பிரசவ வலி உண்டானது. உடனே அவள் மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்தது. இதில் சிறுமி ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். பிரசவத்திற்கு பிறகு தாய், சேய் இருவரும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், கைதான சிறுமியின் வளர்ப்பு தந்தைக்கும், சிறுமி பெற்றெடுத்துள்ள குழந்தைக்கும் மரபணு சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.