அமைச்சர் மங்களசமரவீர யாழில் பொதுக் கக்கூசுக்குள் இருந்த காட்சிகளால் பரபரப்பு

யாழ்ப்பாணம் வந்த மங்களசமரவீர யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் உள்ள கக்கூசுக்குள் இருந்த காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த கக்கூசு கூட்டமைப்பின் முக்கிய கட்சியான தமிழரசுக் கட்சிக்கு சொந்தமானதாகும். இந்தக் கக்கூசையே தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தமது அலுவலகமாகப் பாவித்து வருகின்றனர்.

தமக்கு உயிர் கொடுத்து பெரிய மனுசராக உருவாக்கி விட்ட சொந்தத் தாயை பிச்சைக்காரி போல் வைத்துவிட்டு பெண்டாட்டிகளையும் சின்னவீடுகளையும்  மினுக்கி மினுக்கி வைத்திருப்பது போல் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் செயற்பட்டு வருகின்றார்கள். தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமாக இலங்கையில் முக்கிய இடங்களில் பல வீடுகள் இருப்பதுமட்டுமல்லாது இந்தியாவிலும் வீடுகள் உள்ளன. அதிலும் மாவைக்கு இந்தியாவில் பல கோடி ரூபா மதிப்பில் வீடுகள் உள்ளன. அதை விட யாழ்ப்பாணத்தின் முக்கிய கோடிஸ்வரனாக உள்ளார் உதயன் முதலாளி. இவ்வாறானவர்கள் எல்லாம் இருந்தும் என்ன பயன்?. தமிழரசுக் கட்சி அலுவலகம் பொதுக் கக்கூசு நிலையில் கேவலமாக இருப்பதை யாரும் கண்டு கொள்ளவில்லை.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சரை இவ்வாறான கேவலமான இடத்திற்கு கொண்டு வந்து அமர்த்தி தமது அந்தரங்கங்களைத் திறந்து காட்டிச் சந்தோசப்பட்டுள்ளனர் தமிழரசுக் கட்சியினர். மங்களசமரவீர இந்தக் கேவலமான கக்கூசைப் பார்வையிடும் போதே தமிழரசுக் கட்சியின் ‘அந்தரங்க வாசத்தை‘ முகர்ந்திருப்பார்.

ஏற்கனவே மாவை சேனாதிராசா குளிப்பது குறைவு என்று அரசல்புரசலாக பலராலும் கூறப்பட்டுவருகின்றது. குளிரூட்டப்பட்ட மண்டபத்திற்குள் இவர் புகுந்தால் ‘மாமைற்‘ என்ற ஒரு சத்து மாவின் வாசனை வரும் என அவருடன் நெருங்கிப் பழகிய பல ஆதரவாளர்கள் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தமக்கென உள்ள ஒரு கட்சி அலுவலகத்தை கக்கூசாக வைத்துக் கொண்டு அதற்கு முக்கியஸ்தர்களை அழைத்துப் பேசி வருகின்ற தமிழரசுக் கட்சியினால் தமிழரின் மானம் காற்றில் பறக்கின்றது வெளிப்படை.

இதே வேளை தமிழரசுக் கட்சியினர் ஐக்கியதேசியக் கட்சியை அவமானப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறன ஒரு இடத்திற்கு வெளிவிவகார அமைச்சரை அழைத்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

ஐக்கியதேசியக் கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் இருக்கும் நன்மதிப்பை தமிழரசுக் கட்சியினர் கேவலப்படுத்தியுள்ளனர் என யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுமக்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.