கனடாவில் இருந்து கள்ள பெண்டாட்டி பிடிக்க வந்த யாழ். இளைஞன் லண்டனில் அநாதை பிணம்!

அடுத்தவனின் மனைவியான கள்ள காதலியுடன் உல்லாசம் அனுபவிக்க கனடாவில் இருந்து லண்டன் வந்த மன்மத இளைஞன் அடித்து கொல்லப்பட்டு உள்ளார்.

பேஸ்புக் மூலம் தமிழ் பெண் ஒருவருடன் ஏற்பட்ட சட் தொடர்பை வெட் வரைக்கும் கொண்டு செல்ல இவர் வந்திருந்தார்.

ஆயினும் விபரம் அறிந்த கணவன் இவரை கடுமையாக எச்சரித்தார். இவர் பதிலுக்கு வீர வார்த்தைகளை உச்சரித்தார். நான் ஆர் எண்டு தெரியுமோ? கனடா வந்து கேட்டு பார்? என்று போனில் சொல்லி சண்டித்தனம் காட்டினார்.மனைவியை விட்டு தா என்று கேட்டு நச்சரித்தார்.

இந்நிலையில் சுரேன் நரேந்திரன் – வயது 32 கார் தரிப்பிடம் ஒன்றுக்கு அருகில் அநாதை பிணமாக கிடந்து பொலிஸாரால் மீட்கப்பட்டார்.

இவரின் படுகொலை தொடர்பாக சந்தேகத்தில் லண்டனை சேர்ந்த ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் – வயது 37, கிரோராஜ் யோகராஜா – வயது 30 ஆகியோருடன் 17 வயது சிறுவன் ஒருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றார்.