கதிர்காமத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நடந்தே வரும் சிங்கள யுவதி

 இலங்கை முழுவதையும் கால்நடையாக சுற்றி பார்க்கின்ற  சாதனை முயற்சியில் தேவிகா என்கிற பெண் குதித்து உள்ளார்.

இவர் கடந்த 10 ஆம் திகதி கதிர்காமம் கிரி விகாரைக்கு அருகில் நடை பயணத்தை ஆரம்பித்தார். நேற்று காலி மாவட்டத்தில் உள்ள அஹங்கம நகரத்தை கடந்தார்.

கதிர்காமம், மாத்தறை, காலி, களுத்துறை, கொழும்பு, சிலாபம், புத்தளம், மன்னார் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு சென்று  யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, யால ஊடாக கரையோர பாதைகளில் பயணித்து சரியாக ஒரு மாதத்தில் கதிர்காமம் கிரி விகாரையிலேயே பயணத்தை நிறைவு செய்ய உத்தேசித்து உள்ளார்.