யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் காதல் லீலைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை

யாழ்.பல்கலைக்கழகத்தில் விரிவுரை மண்டபங்களில்  மாணவ ஜோடிகள் அநாகரீகமாக நடந்து கொள்ளும் நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி விரிவுரை மண்டபங்களில் "ரொமான்ஸ் பண்ணாதீர்கள்" என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

 மாணவ ஜோடிகள் விரிவுரை மண்டபத்திற்குள் ஜோடியாக இருந்தல் மற்றும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருத்தல் மற்றும் முத்தமிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மாணவர்களால் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் மேற்படி மாணவர்களிடம் இது தொடர்பாக தெரியப்படுத்தியபோதும் அது தொடர்பாக அந்த மாணவர்கள்  பெரிதாக அலட்டிக் கொள்ளாத நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த திடீர் சுவர் ஒட்டி முடிவை எடுத்துள்ளது.

இந்த சுவரொட்டி விரிவுரை மண்டபங்களில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ரொமான்ஸ் பண்ணுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டிருந்தன.

யாழ் பல்கலைக்கழகத்தில் தென்னிலங்கையில் இருந்து வந்த மாணவர்கள் வெளிப்படையாக தங்கள் காதல் செயற்பாடுகளை மற்றவர்கள் முன் அரங்கேற்றுகின்றனர். ஆனால் யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் தமிழ் மாணவர்கள் தமக்கிடையே காதல் என்ற பெயரில் மறைவிடங்களில் சந்தித்து காமலீலைகளில் ஈடுபட்டுவிட்டு வெவ்வேறு நபர்களைத் திருமணம் புரிகின்றனர். ஒரு மாணவர் பலருடன் தொடர்பு கொண்ட சந்தர்ப்பங்களும் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதே வேளை தென்னிலங்கைப் பல்கலைக்கழகத்தில் இவ்வாறான சுவரொட்டிகள் காணப்படுவதில்லை. அங்கு தமிழ் மாணவர்கள் காதல் செயற்பாடுகளில் கண்மூடித்தனமாக ஈடுபட்டும் அவர்களை அப் பல்கலைக்கழகங்கள் எச்சரிக்கை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.