பெண்ணுறுப்பு வடிவமைப்பு சிகிச்சை மோகத்தில் சிக்கி உள்ள யாழ். பெண்கள்!

இந்திய பெண்களிடையே அதிகரித்து வருகின்ற வடிவமைப்பு பெண்ணுறுப்பு மோகம் யாழ்ப்பாண பெண்களையும் தொற்றி உள்ளது.

வெளியழகை மாத்திரம் அன்றி உள்ளழகையும் நேர்த்தியாக வைத்திருக்க வேண்டும் என்கிற பெருவிருப்பம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்று வடிவமைப்பு பெண்ணுறுப்பு சிகிச்சை குறித்து விசாரித்து உள்ளனர்.

பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மூலம் முகத்தின் பாகங்களை விரும்பியபடி மாற்றி கொள்ள முடிவது போல் வடிவமைப்பு பெண்ணுறுப்பு சிகிச்சை மூலம் பெண்ணுறுப்பின் வடிவத்தை மாற்ற வடிவமைப்பு பெண்ணுறுப்பு சிகிச்சை உதவுகின்றது.

ஆரம்பத்தில் இந்தியா, இலங்கை போன்ற ஆசிய நாடுகளை சேர்ந்த பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று இரகசியமாக இச்சிகிச்சையை செய்து உள்ளனர். இப்போது மும்பையில் இதற்கென தனி வைத்தியசாலை உள்ளது.

பெண்ணுறுப்பில் பல பாகங்கள் இருக்கின்றன. அதில் எப்பாகம் மாற்றி அமைக்க வேண்டுமோ அதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சிகிச்சையின் மூலமாக பெண்ணுறுப்பின் வெளிப்புற பாகம் அழகாக்கப்படுகிறது.

வயதாக வயதாக மனித உடல் பாகங்களும் வயதாகி போகும். இது பிறப்புறுப்புக்கும் பொருந்தும். முக்கியமாக பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகும், நடுவயதை எட்டும்போதும் பெண்ணுறுப்பின் இறுக்கம் குறைந்து விடும். இதை சரி செய்வதற்கும். மீண்டும், பெண்ணுறுப்பை இறுக்கமாக செய்வதற்கும் கூட பலர் இச்சிகிச்சையை மேற்கொள்கின்றனர்.

மீண்டும் கன்னி தன்மை அடைவதற்காகவும், தாம்பத்திய உறவை சிறப்பித்து கொள்ளவும்கூட இச்சிகிச்சையை செய்கின்றனர்.

பேஸ்புக் சமூக இணைப்பு தளம் காரணமாக உலகம் இன்று கிராமமாக சுருங்கிய நிலையில் இச்சிகிச்சை குறித்து யாழ்ப்பாண பெண்கள் பலருக்கும் மிக சாதாரணமாகவும் விபரமாகவும் தெரிந்து உள்ளது என்று யாழ். போதனா வைத்தியசாலையை சேர்ந்த வைத்திய நிபுணர் ஒருவர் எமக்கு தெரிவித்தார்.