அடுத்த மாதம் பங்களாதேஷ் செல்கிறார் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் பங்களாதேஷுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்புக்கு அமைய, ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதியின் பங்களாதேஷ் விஜயம் தொடர்பில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சுக்களும் ஏற்கனவே ஆயத்தங்களை செய்து வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சில உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் என்ற 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் மைத்திரிபால சிறிசேன பங்களாதேஷிற்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.