வடக்கு மாகாண முதல்வரும் நாசகார வேலையில் இறங்கினார்

முதலமைச்சர் அலுவலகத்துக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற கடவையில் ரயில் வருவதற்கான சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்ட நிலையிலும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பயணித்த வாகனம் கடவையைக் கடந்து சென்ற சம்பவம், புதன்கிழமை (10) இடம்பெற்றது.

முதலமைச்சர் வாகனம் கடந்து செல்வதற்கு அங்கு கடமையிலிருந்து பொலிஸாரும் உடந்தையாக இருந்துள்ளனர். ரயில் வருகின்றதா என ரயில் பாதையைப் பார்த்து, வரவில்லையென்றவுடன் வாகனத்தை கடக்க சைகையும் காட்டினர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இந்தக் கடவைக்கு அருகிலுள்ள பிறிதொரு பாதுகாப்பற்ற கடவையில் கடக்க முற்பட்ட கார் ஒன்று விபத்துக்குள்ளாகி பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு முதல்வர் பலரது நாசகார வேலைகளுக்கு தடையாக உள்ளதால் அவரை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும் என வடக்கு உட்பட்ட இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பலர் காத்திருக்கும் நிலையில் ரயில் கடவையில் முதலமைச்சரை கடவுள் காப்பாற்றினார் எனக் கூறும் வெற்றிவேல் இந்த பொலிஸ்காரர் கூறினால் ஐயா உடன் செல்வதா ஐயா அவருக்காக இல்லாவிட்டாலும் தமிழனைக் காக்க அவர் நிதானமான பயணம் செய்ய வேண்டும்.