இராணுவத்துக்கும் புனர்வாழ்வு : பலாலியில் பிரதமர் தெரிவிப்பு!

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்ததை போல ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்களுக்கும் பயிற்சியளித்து சமூகத்துடன் இணைக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் இன்று இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் வைபத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை கூறினார். 

தற்போது இராணுவத்தில் ஓய்வு பெறும் நிலையில் பெருமளவான இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஓய்வு பெற்று சமூக நீரோட்டத்துக்கு செல்லும்போது அவர்களுக்கு பயிற்சி அளித்து சமூகத்தில் இணைக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார்.