விக்­கியின் சுனாமி பேர­லையில் சிக்­கித் தவிக்கிறார் சம்பந்தன்

வடமாகாண முதலமைச்சர் விக்­கி­னேஸ்­வரன் எனும் சுனாமி பேர­லையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான சம்பந்தன் சிக்கி தவிக்­கிறார். இந்த சுனாமி பேர­லை­யி­லி­ருந்து சம்பந்­தனால் மீண்டு வர

முடி­ய­வில்லை என்று மகிந்த அணியின் முக்­கி­யஸ்­தரும் மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான தினேஷ்

குண­வர்த்­தன தெரி­வித்தார்.

வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்­பித்­துள்­ளதன் மூலம் கூட்­ட­மைப்­புக்குள் சிக்­கல்கள் ஏற்­பட்­டுள்­ளன. சம்பந்தன் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருந்­தும்­கூட விக்­கி­னேஸ்­வ­ரனே பிர­ப­ல­மா­ன­வ­ராக

காணப்­ப­டு­கின்றார் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. மேலும் குறிப்­பி­டு­கையில்,

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருந்தும் கூட அவ­ரை­விட வடக்கு மாகாண

முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் பிர­ப­ல­மா­ன­வ­ராக காணப்­ப­டு­கின்றார்.

வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்­பித்­துள்­ளதன் மூலம் கூட்­ட­மைப்­புக்குள் சிக்­கல்கள் ஏற்­பட்­டுள்­ளன. விக்­கி­னேஸ்­வரன் மேலே இருக்கின்றார். சம்பந்தன் கீழே இருக்கின்றார். அதன்படி தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சிக்கல்கள் காணப்படுகின்றன என்றார்.