யாழ்ப்பாண அரச அதிபரே!! என்னைக் கொலை செய்தது ஏன்?

யாழ்ப்பாண அரச அதிபரே!! போக்குவரத்துப் பொலிசாரே!! சட்டத்துறையைச் சார்ந்தவர்களே! எல்லோருமாகச் சேர்ந்து என்னைக் கொலை செய்துவிட்டீர்கள்..

நான் உங்கள் எதிரியா? நான் உங்கள் துரோகியா? நான் பயங்கரவாதியா? நான் பாடசாலை சென்று படித்து நல்ல நிலைக்கு வருவதற்கு விரும்பியது தப்பா? நீங்கள் விட்ட பிழைகளினால் நீங்கள் பெற்ற லஞ்சத்தினால், நீங்கள் அசன்டையீனமாக இருந்ததால் என்னை வாகனத்தால் கொலை செய்து விட்டார்கள். நீங்களே இவற்றைப் பொறுப்பேற்க வேண்டும்.

இந்தியன் படத்தில் தனது மகனையே கொலை செய்தார் இந்தியன் தாத்தா. காரணம் ஏற்பட்ட விபத்துக்கு மகனே பொறுப்பு என...பாடசாலைப் பேரூந்தை சரிவர கவனிக்காது லஞ்சம் பெற்று அது ஓடுவதற்கான அனுமதியைக் கொடுத்த மகனை அவனது தந்தையே கொலை செய்தார்.

ஆனால் இப்போ நீங்கள் ஏ.சி அறைக்குள் இருந்து நான் சொன்ன இந்தத் தகவல்களைப் படித்துவிட்டு எந்த முட்டாள் எழுதினவன் என ஏசிவிட்டோ அல்லது கொட்டாவி விட்டோ இருந்துவிடுவீ்ர்கள்.

எனது அம்மா காயமடைந்தும் என்னைப் பற்றியே நினைத்து நினைத்து அழுவதை பார்த்து என்னால் பொறுக்க முடியாதுள்ளது. எனது அப்பா இரவிரவாக கண் முழித்து என்னைத் துாங்கவைத்துவிட்டு தான் துாங்குவார்.  நான் நிரந்தரமாகத் துாங்கிய பின்னும் இப்போதும் கண் முழித்து அழுகின்றார்.

இனிமேலும் என்னைப் போல் உள்ளவர்களை கொலை செய்யாதீர்கள். வாகனச் சாரதிகளில் தவறுகள் இல்லை. தவறுகள் அனைத்தும் உங்களைப் போல் உள்ளவர்களிடமே இருக்கின்றது.

மனுநீதிச் சோழன் போல் எனது கொலையில் நான் நியாயம் கேட்கின்றேன் நீதித்துறையே...... எனக்கு நியாயம் வேண்டும். என்னைப் போல் இனி ஒருவரும் இறக்க கூடாது...

நன்றி