தைப்பொங்கலை முன்னிட்டு மயூரபதி கோவிலில் மஹிந்த குடும்பம் வழிபாடு

உழவர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் மயூரபதி அம்மன் கோவிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை பாமங்கடை அருகே அமைந்துள்ள மயூரபதி அம்மன் கோயிலுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் வருகை தந்து விசேட வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இவர்களின் வருகையை முன்னிட்டு பாமங்கடை மற்றும் மயூரபதி கோவிலின் சுற்று வட்டாரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கு முன்னதாக மஹிந்த ராஜபக்ஷ அவரது முன்னாள் மொழிபெயர்ப்பாளர் ராகுலன் எழுதிக் கொடுத்திருந்த பொங்கல் வாழ்த்துச் செய்தியை தமிழில் படித்து, தமிழ் மொழியினூடாக பொங்கல் வாழத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.