யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ! 1939 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தினால் எதிர்வரும் 19 ம், 20ம் திகதிகளில் மரபு ஒழுக்கங்களுக்கு அமைய நடைபெறவுள்ள 31 ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆயிரத்து 939 பேர்களுக்கான பட்டங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது.

இவற்றில் இவற்றில் 1825 பட்டதாரிகளுக்கும், 114 டிப்ளோமா தாரிகளுக்குமான பட்டங்கள் வழங்கப்படவுள்ளது.

இவர்களில் ஆயிரத்து 521 பட்டதாரிகள் பட்டமளிப்பு விழாவில் நேரடியாக சமூகம் தந்து பட்டங்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் 8 அமர்வுகளாக நடைபெறும் இப்பட்டமளிப்பு விழாவில் யாழ்.பல்கலைகழக வேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சி.பத்மநாதன் மாணவர்களுக்கான பட்டங்களை வழங்கி வைக்கவுள்ளார் என்று உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு தொடர்பில் நேற்று மாலை பல்கலைக்கழகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

இச் சந்திப்பில் கலந்து கொண்ட யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி அறிவிப்பினை விடுத்துள்ளர்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:

19 ஆம் திதகி முற்பகல் 9 மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது அமர்வில் 170 மாணவர்களுக்கும், முற்பகல் 10.45 மணிக்கு ஆரம்பமாகும் 2 ஆவது அமர்வில் 193 மாணவர்களுக்கும்,

பிற்பகல் 1.45 மணிக்கு ஆரம்பமாகும் 3 ஆவது அமர்பில் 196 மாணவர்களுக்கும், 3.30 மணிக்கு ஆரம்பமாகும் 4 ஆவது அமர்வில் 201 மாணவர்களுக்கான பட்டங்களும் வழங்கப்படும்.

மறுநாள் 20 ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு ஆரம்பமாகும் 5 ஆவது அமர்வில் 181 மாணவர்களுக்கும், முற்பகல் 10.45 மணிக்கு ஆரம்பமாகும் 6 ஆவது அமர்வில் 193 மாணவர்களுக்கும்,

பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும் 7 ஆவது அமர்வில் 188 மாணவர்களுக்கும், பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும் 8 ஆவது அமர்வில் 199 மாணவர்களுக்கும் பட்டங்கள் வழக்கப்படும்.

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கும் பட்டம் பெறுவதற்கும் சமூகமளிக்கும் ஒவ்வொருவருக்கும் மேலதிகமாக ஒருவர் மண்டபத்தில் பார்வையாளராக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் துணைவேந்தர் மேலும் தெரிவித்திருந்தார்.