விபத்தில் காயமடைந்த சென்பொஸ்கோ வித்தியாலய மாணவன் மரணம்!! பாடசாலையில் விளையாட்டுப் போட்டி இன்று

கடந்த 4 நாட்களுக்கு முன் யாழ் பலாலி வீதியில் மினபஸ் சாரதியின் கொடூரச் செயற்பாட்டால் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்திருந்த பார்த்தீபன் சுகத்திரியன் (வயது 5)என்னும் யாழ் சென்பொஸ்கோ மாணவன் நேற்று இரவு மரணமடைந்துள்ளான்.

இன்று யாழ் சென்பொஸ்போ வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று 1 மணிக்கு நடைபெற இருந்தது. இருப்பினும் அது பிற்போடப்படாது அஞ்சலி நிகழ்வுடன் நடைபெறுமென பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாடசாலையின் இச் செயற்பாடு விமர்சனங்களுக்கு உள்ளாகும் என தெரியவருகின்றது. இது தொடர்பாக கல்வி அதிகாரிகளின் நடவடிக்கை என்ன என்பதும் தெரியவில்லை.

அண்மையில் வடமராட்சி கிழக்கு அடம்பன் பாடசாலையில் விளையாட்டுப் போட்டியில் உயிரிழந்த மாணவிக்காக விளையாட்டுப் போட்டி நிறுத்தப்பட்டது.