ஊர்காவற்துறை வைத்தியசாலை வைத்தியருக்கு இராணுவத்தையும் பொலிசாரையும் தெரியும் - வைத்தியம் தெரியாதா?

விபத்தில் காயமடைந்தவர் இரண்டு கடிதங்கள் தனக்கு தந்தால் மாத்திரமே சிகிச்சையளிக்க முடியும் என வைத்தியர் ஒருவர் தெரிவித்த சம்பவமொன்று ஊர்காவற்றுறை விபத்தில் காயமடைந்தவர் இரண்டு கடிதங்கள் தனக்கு தந்தால் மாத்திரமே சிகிச்சையளிக்க முடியும் என வைத்தியர் ஒருவர் தெரிவித்த சம்பவமொன்று ஊர்காவற்றுறை பி தர ஆதார வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை (08) இடம்பெற்றுள்ளது.

விபத்தொன்றில் காயமடைந்த நபரொருவர், சிகிச்சைப் பெறுவதற்காக  ஊர்காவற்றுறை பி தர ஆதார வைத்தியசாலைக்கு சென்றபோது, வைத்தியர், எந்தவித உயிருக்கும் சொத்துக்கும் தன்னால்(குறித்த நபரால்) சேதம் விளைவிக்கவில்லையென்ற கடிதத்தை கோரியுள்ளார்.

இதையடுத்து, வைத்தியர் கோரிய கடிதத்தைக் கொடுத்ததும், விபத்தின் போது, பாதிக்கப்பட்ட மற்றைய நபரின் கடிதமும் வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இரண்டு கடிதங்களுக்கு கிடைத்த பின்னரே தன்னால் சிகிச்சையளிக்க முடியும் என அந்த வைத்தியர் கூறியுள்ளார்.

காயமடைந்தவர் இரத்தத்துடன் நீண்ட நேரம் காத்திருந்து, கடிதம் வாங்கிக் கொடுத்த பின்னரே சிகிச்சையை பெற முடிந்தது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார வைத்தியதிகாரி பணிமனைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

விபத்து நடந்த இடத்துக்கு வந்து, இரண்டு தரப்பினரையும் சமரசம் செய்த போக்குவரத்துப் பொலிஸாரை அழைத்த காயமடைந்தவர், வைத்தியருடன் உரையாடச் செய்துள்ளார். இதன்போது, தான் இரண்டு தரப்பினரையும் சமரசம் செய்வதற்காக கடிதம் கோரியதாக வைத்தியர் கூறினார்.

இதன்போது, இரண்டு தரப்பினரையும் ஏற்கனவே சமரசம் செய்துவிட்டதாக போக்குவரத்துப் பொலிஸார் கூறினர்.

உரையாடல் முடிந்து வெளியில் வந்த குறித்த வைத்தியர், எனக்கு பொலிஸார், இராணுவத்தினரை நன்கு தெரியும் நீங்கள் எங்கும் செல்லுங்கள் பார்ப்போம் எனக்கூறிவிட்டுச் சென்றார்.