யாழில் பட்டப்பகலில் பொதுமக்களிடம் கொள்ளையடிக்கும் வர்த்தகர்கள் !! தடுக்கப் போவது யார்?

விடுதலைப்புலிகள் குடாநாட்டை விட்டு விலகி படையினரின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் வந்த பின்னர் ஏனைய பகுதிகளில் யுத்தம் நடைபெற்ற காலங்களில் யாழ் குடாநாட்டில் தமிழர்களின் சொத்துக்களை சூறையாடியவர்களில்

 முக்கிய பங்கு வகித்தவர்கள் தமிழ்வர்த்கர்களே.

ஏ9 பாதையால் பொருட்களைக் கொண்டுவர முடியாததைக் காரணம் காட்டி கப்பல்களில் பொருட்களை இறக்கி மக்களுக்கு விநியோகித்து வந்தனர். அந்நேரம் கடலில் விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் சண்டை மூண்டால் இங்கு பொருக்களைப் பதுக்கி வைத்து பணம் சம்பாதித்தனர்.

அந்நேரத்தில் யாழ் அரச அதிகாரிகளாக இருந்தவர்களுடன் இரகசிய ஒப்பந்தங்கள் செய்து விலைகளை தமது விருப்பத்திற்கு ஏற்றி கொள்ளை லாபம் சம்பாதித்து வந்தார்கள். அந்தப் பணத்தில் தரகுப் பணம் அரசாங்க அதிகாரிகளுக்கும் சென்றடைந்ததும் வரலாறு. இவ்வாறு கொள்ளை லாபம் பெற்ற பல முதலாளிகள் தற்போது பெரும் கோடிஸ்வரர்களாக யாழ்ப்பாணத்தில் வலம்வந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தகர்கள் தமது வியாபார நடவடிக்கையை முன்னெடுப்பதில் பெருமளவு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளார்கள். வேறு மாவட்டங்களில் இருந்து வரும் போட்டி வியாபாரிகளால் இவர்கள் கொள்ளை இலாபம் பெறுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போதும் சில வர்த்தகர்கள் கொள்ளை லாபம் பெறும் நோக்கில் செயற்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் தற்போது அமுலில் உள்ளன. அந்த விலையை விட அதிகமாக விற்கும் வர்த்தகர்களுக்கு சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இருப்பினும் சில பொருட்களுக்கான விலைச் சுட்டியை சில நிறுவனங்கள் தமது விருப்பத்திற்கு அமைவாக நிர்னயித்து விற்பனை செய்து கொள்ளை லாபம் பெற்று வருகின்றன.

இங்க காட்டப்பட்டுள்ள குழந்தைகளுக்கான துடைப்பான்களில்(Baby wips)  குயிட் பேபி (Cutebaby) என்ற பெயருள்ள துடைப்பான் வெவ்வேறு கடைகளில் வெவ்வேறு விலைகளில் விற்கப்பட்டுள்ளதை காட்டியுள்ளோம்.

குறித்த  குயிட் பேபி (Cutebaby) துடைப்பான்களின் (Baby wips) கொள்முதல் விலை 253 ரூபா ஆகும். இதன் குறியீட்டு இலக்கம் 941288300854 ஆகும். இதனது உண்மையான விலைப் பெறுமதியை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் அறிந்து கொள்ளலாம்.

குறித்த  குயிட் பேபி (Cutebaby) துடைப்பான்களை யாழ்ப்பாணத்தில் யாழ் பேபிநீட்ஸ் நிறுவனம் 450 ரூபாவிற்கும் யாழ் நாவலர் வீதியில் உள்ள ரிசிவி(TCT) சுப்பமார்க்கட் 270 ரூபாவிற்கும் திருநெல்வேலி பலாலி வீதியில் உள்ள பேபிநீட்ஸ் நிறுவனம் 450 ரூபாவிற்கும் நெல்லியடியில் உள்ள நிறுவனம் 300 ரூபாவிற்கும் விற்பனை செய்து வருகின்றது.

இது ரிசிரி சுப்பமார்க்கட் விலை 270 ரூபா.


இது யாழ் பேபிநீட்ஸ் வியாபார நிலையத்தின் விலை 450 ரூபா.

இங்கு சிவப்பு கோட்டால் காட்டப்பட்ட JMO எனும் குறித்த வர்த்தக நிலையத்தின் குறியீட்டின் படி அந்த வர்த்த நிலையத்தால் குறித்த பொருள் 253 ரூபாவிற்கே கொள்வனவு செய்யப்பட்டதாக குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்து எமக்கு இரகசியத் தகவல்கள் கிடைத்திருந்தன.

இது நெல்லியடியில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தின் விலையாகும்.

யாழ் பேபிநீட்ஸ் நிறுவனம் கொள்விலையிலும் பார்க்க விற்பனை விலையை 80 வீதத்திற்கும் அதிகமான அதிகரித்த விலையில் இவ்வாறு பொருட்களை விற்பனை செய்வது எந்தவிதத்தில் நியாயமானது என்பதை வாடிக்கையாளர்களே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். குறித்த நிறுவனம் இவ்வாறே குழந்தைகளுக்கான பல பொருட்களையும் அறாவிலைக்கு விற்று வருவதாக வாடிக்கையாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறே யாழ்ப்பாணத்தில் பல வர்த்தக நிலையங்கள் செற்பட்டு வருகின்றன. முன்னைய காலங்களில் இவர்கள் கூறும் விலைக்கு பொருட்களை வாங்கிக் வந்த வாடிக்கையாளர்கள் இனியும் அவ்வாறு செயற்பட மாட்டார்கள் என்பதை வர்த்தகர்கள் உணராவிட்டால் அவர்கள் கடையைப் மூடி விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.