வெள்ளவத்தையில் பாலியல் தொழில் நிலையம் முற்றுகை: 4 பெண்கள் கைது

ஆயுர்வேத மசாஜ்நிலையம் என்ற பெயரில் வெள்ளவத்தை பகுதியில் இயங்கிய பாலியல் தொழில் நிலையம் ஒன்றைபொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

அவசர நீதிமன்றஅனுமதியின் பேரில் இந்த முற்றுகையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பாலியல் தொழிலில்ஈடுபட்டதாக கூறப்படும் 4 பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் 20, 21 மற்றும் 38 வயதுக்குட்பட்டவர்கள்.

கைது செய்யப்பட்டபெண்கள் வவுனியா, முகத்துவாரம், பாதுக்க மற்றும் புளத்சிங்கள ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும்பொலிஸார் கூறியுள்ளனர்.

பாலியல் தொழில்நிலையத்தின் முகாமையாளர் எனக் கூறப்படும் ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் இன்றுகல்கிஸ்சை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.