புத்துார் பிரதேசசபை கட்டட மதில் மீது கார் மோதியதில் இரு பெண்கள் படுகாயம்

புத்தூர் பிரதேச சபைக்கு முன்னால் பயணித்துக் கொண்டிருந்த கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து பிரதேச சபையின் மதில் மீது மோதியுள்ளது. இதன்போது, காரில் பயணித்த இரு பெண்களும் படுகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்குறித்த காரின் ரயர் வெடித்ததாலேயே விபத்து ஏற்பட்டதாக அச்சுவேலிப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் காரை பாரம் துாக்கி மூலம் வாகனத்தி ஏற்றி பொலிஸ்நிலையம் கொண்டு சென்றதாகத் தெரியவருகின்றது.