யாழில் சாப்பிட்ட பின்னர் ‘பல்லு குத்தக் குச்சி கேட்கும்’ அபூர்வ பூனை (Video)

பொதுவாகவே மனிதர்கள் தான், சாப்பிட்ட பின்னர் தமது பல் ஈறுகளில் அடைந்திருக்கும் உணவுத் துணிக்கைகளை குச்சிகளைக் கொண்டு குத்திச் சுத்தப்படுத்துவதுண்டு. இதற்காகவே இப்போது ஹோட்டல்களில் Teeth sticks விதம்விதமாக எல்லாம் பாவனைக்கு வந்துவிட்டன. 

சாப்பிட்ட பின்னர் 'கட்டாயம் பல்லு குத்துவது' என்பது இப்போதெல்லாம் ஒரு பேஸனாகவே மாறிப்போய்விட்டது. பலர் அநியாயத்துக்கு சும்மாக்கூட பல்லைக் குத்தி முரசைக் காயப்படுத்தி  இரத்தத்தை வர வைத்து விடுகின்றனர்.

இந்த பல் குத்தும் கலாசாரத்தை 'அஞ்சான்' படத்தில் ஒரு ஸ்டைலாகவே மாற்றிக்காட்டியவர் தமிழக திரைப்பட நடிகர் சூர்யா. 

இந்த நவநாகரிக உலகில் தற்போது யாழ்ப்பாணத்தில்... பூனை ஒன்றும் சாப்பிட்ட பின்னர் பல்லுக்குத்த தொடங்கி விட்டது. இந்த அபூர்வ பூனையின் செயற்பாடு  பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.    

உலகம் போற போக்கில் இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ… நாம் அறியோம் சாமி…