‘எங்களுக்கு அங்கஜன் அண்ணா வேலையெடுப்பார் ‘ - யாழ் வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம்

நேற்று யாழ் வைத்தியசாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தேவையற்றதொன்றென அறியப்பட்டுள்ளது.

நேற்றையதினம் சுகாதார உதவியாளர்கள் மேற்கொண்ட பணிபுறக்கணிப்பு ,அவர்களின் வேலைக்கு பங்கம் விளைவிப்பாக அமைந்துள்ளது.

ஒரு திணைக்களத்தின் சுகாதார உதவியாளர்களின் கடைமைகளை நன்கு அறியாத ஊழியர்களே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலைக்கு ஆட்சேர்க்கும்போது ,என்னவேலையெண்டாலும் செய்யுறம் என வருபவர்கள் ,பின்னர் அது செய்யமுடியாது, இது செய்யமுடியாது என்பது கேலிக்குரிய விடயமாகும்.

சுகாதார உதவியாளர்களின் கடைமையாக , வைத்தியசாலையை சுத்தமாக வைத்திருத்தல், நோயாளர்களை காவிச்செல்லுதல் போன்ற வேலைகள் வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசியல் பின்புலங்கள் மூலம் வேலைக்கு அமர்த்தப்பட்ட சில ஊழியர்களின் செயற்பாட்டால் பல ஊழியர்கள் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

யாழ் போதனா(பொது) வைத்தியசாலையின் பணிப்பாளரினால் , சுகாதார உதவியாளர்களை செய்யுமாறு பணிக்கப்பட்ட கடைமை ஒன்றும் புதிய விடயமல்ல.

விடுதிகளை சுத்தமாக வைத்திருப்பதற்காக ,விடுதிகளை கூட்டுமாறு கூறப்பட்ட அறிவுரையை செய்யமுடியாதென ஊழியர்கள் மறுப்பதனாலேயே இந்த இழுபறி நிலைதோன்றியுள்ளது.

ஊழியர்கள் அதிகம் இருப்பதாக காரணம்காட்டி  அண்மையில் சில வைத்தியசாலையில் பணியாளர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் , இவ்வாறான போராட்டங்கள் ஊழியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இவர்களது இந்த நியாயமற்ற முரண்பாடுகளால் வைத்தியசாலையின் சுத்திகரிப்பு தொழிலாளர்களின் வேலையையும் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.

அத்துடன் கடைமையை செய்யத்தவறினர் என குற்றஞ்சாட்டப்பட்டு , விசாரணையின் பின்னர் பணிநீக்கம் செய்யப்படவும் வாய்ப்புக்கள் உள்ளது.

இவ்வாறு கடைமையில் ஈடுபடுவதனை தவிர்த்துபோராட்டத்தில் ஈடுபட்ட சிலரை அழைத்து ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?? உங்களுக்கு கொடுக்கப்பட்ட கடைமையை தானே செய்யச்சொல்லி கேட்கிறார்கள்??

தொடர்ந்தும் இவ்வாறு செய்யதால் வேலையிலிருந்து நீங்கள் கலைக்கப்படவாய்ப்புக்கள் உண்டே!! என சிலர் அறிவுரை கூறியபோது , எங்களுக்கு இந்த வேலையில்லாட்டிலென்ன...

அங்கஜன் அண்ணா வேற வேலை எடுத்துத்தருவாரென திமிருடன் கூறியுள்ளனர் ஊழியர்கள்.

இளைய சமூகத்தை தவறாக வழிநடத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ஈடுபடுகிறாரா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

எனவே இதன் பின்புலம் ஆராயப்படவேண்டிய நிலையிலுள்ளது.

இவ்வாறு தொடர்ந்து இவர்கள் ஈடுபட்டு வந்தால் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றிற்கு சென்ற அங்கஜனுக்கும் ஆப்புக்கள் இறுக வாய்ப்புக்கள் உண்டு.

எது எவ்வாறாக இருந்தாலும் பலர் வேலையற்று இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் புதியவர்களுக்கு வேலை கொடுக்க இது ஒரு நல்ல வாய்ப்பென கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.