சட்டவிரோதமாக மண் அகழ்ந்தவர் ஆயுதங்களை கைவிட்டு தலைமறைவு!

இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள முள்ளிவாய்க்கள் பொதுக்காணிகளில் சட்டவிரோதமாக மண் அகழப்படுவதாக பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக காவற்துறையினருக்கு ஏற்கனவே தகவல் வழங்கியதாகவும், அவர்களின் கண்காணிப்பு முல்லை-பரந்தன் பிரதான வீதியில் மட்டுமே இருக்கின்றது, ஆனால் மண் அகழ்வுக்காரர் புதிதாக பாதைகள் அமைத்து இராணுவத்தினர் பயன்படுத்தும் பிரதான வழியூடாக மண்னை கடத்திச் செல்வதாகவும் இதைக்கண்டும் காணாதவாறு படையினர் இருப்பதாகவும் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

பிரதேச மக்களின் தகவலை அடுத்து பிரதேசவாசிகளுடன் எமது செய்தியாளர் குறித்த மண் அகழ்வு இடத்திற்கு சென்ற போது மண் அகழ்ந்தவர்கள் சவல், மண்வெட்டி ஆயுதங்களை கைவிட்டு தலைமறைவாகிவிட்டார்கள். எனினும் சிலமணி நேரம் கழித்து தொடர்ந்து ஆகழ்ந்த மண்னை அங்கிருந்து உழவு இயந்திரத்தில் ஏற்றிச்சென்றுள்ளனர். இதைத் தடுக்கும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று ஊர் தலைவர் திரு.இ.நாகராசா குறிப்பிட்டார்.