முதல்வரின் இறப்பால் இதுவரை 17 பேர் உயிர் இழப்பு (Photos)

தமிழக  முதல்வர் ஜெயலலிதா மறைந்து, சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டார். ஆனால், இவரின் இறப்பு செய்தியை கேட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் மணப்பாறையில் முதல்வர் இறந்த செய்தியை கேட்ட இருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் பல்வேறு இடங்களில் முதல்வரின் உருவப் படத்தை வைத்து மக்கள் அஞ்சலி செலுத்தினர். ஆண்கள் மொட்டையடித்தும் பெண்கள் ஒப்பாரி வைத்தும் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் ஜெயலலிதா மரணமடைந்த தகவலை அறிந்த மணப்பாறை அருகே பண்ணப்பட்டி ஊராட்சியை சேர்ந்த மருதம்மாள்(55) தொலைக்காட்சியில் அதை பார்த்துக் கொண்டிருந்தபோது, அதிர்ச்சியடைந்து அந்த இடத்திலேயே மயக்கி விழுந்து இறந்தார்.

திருச்சி காட்டூர் எல்லக்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமி (80) என்பவரும் முதல்வர் இறந்த செய்தியை கேட்ட அவர் அதே இடத்திலேயே மயங்கி விழுந்து உயிர்விட்டார்.

இது போன்று திருச்சியில் மணப்பாறை சிதம்பரத்தான் பட்டியில் பழனிச்சாமி என்பவர் முதல்வரின் மறைவையொட்டி தீக்குளித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

முதல்வரின் இறப்பால் இதுவரை 17 பேர் உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.