யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் கஞ்சா வைத்திருந்த இஞ்சினியர் கைதானார்

யாழ்ப்பாணம், நாவந்துறை மீன்சந்தைப்பகுதியில் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த பொறியியலாளர் ஒருவரை, நேற்று வெள்ளிக்கிழமை (05) இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர், மாத்தளைப் பகுதியினைச் சேர்ந்த 36 வயதுடைய நபரென பொலிஸார் கூறினர்.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 20 கிராம் கஞ்சாவினையும் கைப்பற்றியுள்ளனர்.

வீதிரோந்துக்கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரைக் கண்டதும் மேற்படி நபர் ஓட முற்பட்டதுடன், கையில் இருந்த சிறு பொதியினை எறிந்துள்ளார். இதன்போது சந்தேகம் கொண்ட பொலிஸார், அவரைக் கைதுசெய்துள்ளனர்.