விபச்சார ஓவ்னர் அருட்செல்வம் அருள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் (Photos)

கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து 100 மீற்றர்கள் தூரத்தில் அமைந்திருக்கும் அலை மரக்காலையின் பின்பக்கமாக ஒற்றையடிப்பாதையை ஏற்படுத்தி  சிறு பற்றைக்காட்டை குடைந்து அதற்குள் பல பெண்களை அழைத்து வந்து நடைபெற்று வரும் விபச்சார நடவடிக்கைகளை எமது நியூஜப்னா செய்தி தளம் இன்று 06.12.2016 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் வெளிக்கொணர்ந்ததையடுத்து, 

விபச்சார ஓவ்னர் அருட்செல்வம் அருள் இன்று இரவு 8.00 மணியளவில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் உயிர் தஞ்சம் அடைந்துள்ளார். 

தமது கிராமத்தில் இடம்பெற்றுவரும் சமுக அநீதிக்கு எதிராக கிராம இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி அருட்செல்வம் அருளை நையப்புடைக்க தயாரானதையடுத்து, பாதுகாப்பு கோரியே இவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். 

இதேவேளை வெளிநாடுகளிலிருந்து வரும் புலம்பெயர் தமிழர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு ‘ஓம் நான் செய்வன். என்னட்ட பணம் இருக்கு. என்னத்தேடி வாற பொம்பளைகளை நான் அனுபவிப்பன்’ என்று, காமப்பிசாசு விபச்சார ஓவ்னர் அருட்செல்வம் அருள் கராராக பேசியதாகவும், 

இந்த திமிர்ப் பேச்சையடுத்து ‘இஞ்ச இருந்துகொண்டே உங்க யாழ்ப்பாணத்தில எங்கட பவர் என்ன, காட்டட்டுமா? என்று புலம்பெயர் தமிழர்கள் கேட்டதையடுத்து கைப்பேசியை 'சுவிஜ் ஒப்' செய்துவிட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் உயிர் தஞ்சம் அடைந்துள்ளார். 

தொடர்புடைய செய்தி:

யாழ். கோப்பாய் ‘அலை மரக்காலை’யில் நடக்கும் விபச்சாரம் (Photos)