யாழ். ஆவரங்காலில் தோன்றிய அருச்சுனன். மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம் (Video)

வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலாளர் பிரிவில் சிறுவன் ஒருவன் வில்வித்தையில் செம கலக்கு கலக்கி வருகின்றான். 

மரம் தெரிகின்றதா? இல்லை. மரத்தில் கிளை தெரிகின்றதா? இல்லை. கிளையில் இலை தெரிகின்றதா? இல்லை.

'இல்லை... இல்லை... இல்லவே இல்லை. தனக்கு காய் மட்டும் தான் தெரிகின்றது' என்று கூறிவிட்டு அந்த பையன் விடும் அம்புகள் சிறீப்பாய்ந்து அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த மாங்காய்களை தரையில் பொத்து பொத்தென்று கொண்டு வந்து சேர்க்கின்றன. 

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் முண்டியடித்துக்கொண்டு ஓடிப்போய் ஒருவரை ஒருவர் தள்ளி விழுத்திக்கொண்டு மாங்காய்களை பொறுக்கி வருகின்றனர். 

'தங்கள் ஊருக்கு மகாபாரத போர் அருச்சுனன் மறுபிறவி எடுத்து வந்துவிட்டான்' என்று ஆவரங்கால் ஊர் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர்.