உடைந்த குரலோடு தமிழக முதல்வரானார் பன்னீர்! (Photos)

முதல்வர் காலமான அதேநேரத்தில், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஒருமனதாக ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக தேர்ந்தெடுத்தனர். 

முதல்வராக தெரிவுசெய்யப்பட்ட பன்னீர்செல்வமும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் ஆளுநர் மாளிகைக்குச் சென்றார்கள். அங்கே ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

அதற்கு முன்பாக, மரணமடைந்த முதல்வருக்கு இரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் 31 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். 

ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதலமைச்சராக பதவியேற்பது மூன்றாவது முறை. முதன்முதலாக டான்சி வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றபோது முதல்வரான பன்னீர்செல்வம் பின்னர், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றபோதும் பன்னீர் முதல்வராகியுள்ளார். 

இப்போது முதல்வர் மறைந்துவிட்டநிலையில் பன்னீர்செல்வம் முதல்வராகியிருக்கிறார்.