பறவைகளின் இரைச்சலால் ஆர்ப்பரிக்கும் வன்னேரிக்குளம் (Video)

கிளிநொச்சி வன்னேரிக்குளம் அலைகரைப்பக்கமாக குளத்தின் நடுவே இயற்கையாக அமைந்துள்ள அடப்பமரங்களில் ஒக்டோபர், நவம்பர் தொடக்கம் ஏப்ரல், ஜூலை மாதங்கள் வரையில் சுழற்சி முறையில் பல்வகையான கொக்குகள் தமது இனவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.

தற்போது பெருந்தொகையான "நத்தைகொத்தி" பறவைகள் கூடுகட்டி குஞ்சு பொரித்துள்ளன. பறவைகளின் இரைச்சலால் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறது வன்னேரிக்குளம்.

இந்த இயற்கை சூழலை இதுவரை யாரும் குழப்பியதில்லை. எதிர்காலத்தில் அபிவிருத்தி நோக்கில் எடுக்கப்படும் எந்த முயற்சியாகினும் இவ்வாறான இயற்கை வாழ்விடங்களை பாதிக்காத- பறவைகளின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்ளப்படவேண்டும்.

வன்னேரிக்குளத்தில் கரும்பு பயிர் உற்பத்தி பண்ணை சூழல் மதிப்பீடு இன்றி நிறுவப்பட்டு தற்போது கரும்பு பயிர்கள் கருகிப்போயுள்ளன. ஒரு திட்டத்தை அமுல்படுத்த முன்னர் ஆராயவேண்டிய விடயங்களை திட்ட நிறைவில் சிந்திப்பது மடமை.

வன்னேரிக்குளத்தில் சுற்றுலா மையத்தை அமைக்க முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாவட்ட அபிவிருத்தியில் அக்கறையுடன் செயற்படுபவர்கள் இதுகுறித்து சரியாக ஆராய்ந்து அனுகூல, பிரதிகூலங்களை மதிப்பீடு செய்து இந்த திட்டத்தை நிலைத்திருக்கக்கூடியதாக நடைமுறைப்படுத்த ஆவன செய்யவேண்டும்.

தகவல்: சசி