சந்திரராஜா மீதான பாலியல் குற்றம் 2013 இலேயே நிரூபணம்!- வடமாகாண கல்வியமைச்சு என்ன செய்கிறது?

யாழ்ப்பாணம் - வலிகாமம் வலயத்தின் கல்விப்பணிப்பாளர் சந்திரராஜா தொடர்பாக 2013 இலேயே பாலியல்குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணால் முறைப்பாடு செய்யப்பட்டதைத்தொடர்ந்து - தற்போது வடமாகாண பிரதி கல்விப் பணிப்பாளராக இருக்கும் பிறேமகாந்தன் தலைமையில் அன்றைய காலப்பகுதியில் விசாரணை இடம்பெற்றது.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

அங்கு முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றிய ஒரு பெண்ணை குறித்த நேரத்துக்கு பணிமுடித்து அனுப்பாமல் - வேண்டுமென்றே பணிநேரம் நீட்டித்து வேலைகளை வழங்கி வந்துள்ளார். 

ஒருநாள் லீவு கேட்டு சென்ற அந்த பெண் ஊழியரை வேலையை முடித்துவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார். அப்பெண் வேலை முடித்துவிட்டுதான் செல்கிறேன் எனக்கூறியபோது - சத்தியம் செய்யும்படி கூறி வற்புறுத்தி - கையைப்பிடித்திழுத்து அப்பெண்ணைக் கட்டிப்பிடிக்க முயற்சித்துள்ளார். இவ்விடய விசாரணையின் பின் அப்பெண்ணை இடமாற்றியதோடு வடமாகாண கல்வியமைச்சு நின்றுவிட்டது. 

இதன் துணிவால் - பல பெண்கள் தொடர்ச்சியாக சந்திரராஜாவின் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சந்திரராஜாவுக்கு சாதகமாக பெண்களை அலுவலகத்துக்குள் அனுப்பி உள்ளே எவரையும் செல்லவிடாது. தடுத்து துணைபோகிறவர்கள் இவரது சாரதியான சச்சிதானந்த சர்மாவும் அங்கு பணியாற்றும் ரவிச்சந்திரனும் ஆவர். இவர்களே சந்திரராஜாவின் அலுவலகத்தின் வாயிற்காப்போர். இவர்களுடன் களஞ்சியப்பொறுப்பாளராக பணியாற்றும் எஸ்.ஜே. என அழைக்கப்படும் ராஜநாயகமும் இணைந்தே மாலை நேர கூத்துக்களில் வலயக்கல்விப்பணிப்பாளருடன் பங்குபற்றுபவர்களாவர்.

இவர்கள் மூவருக்கும் அவ்வலயத்திலுள்ள அதிகாரிகள், கணக்காளர், உத்தியோகத்தர்கள் பயந்தே இன்னமும் பணியாற்றுகின்றனர். அதேவேளை தனது சுயநலத்துக்காக சந்திரராஜாவுடன் தவறான தொடர்பைப்பேணிவந்த பெண் ஊழியரை அண்மையில் வடமாகாண கல்வியமைச்சு இடமாற்றியுமுள்ளது.

தனக்கு எதிராக யாராவது ஊழியர் செயற்பட்டால் - இவர்களைத் தூண்டிவிட்டு அச்சுறுத்தல் விடுவார்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் வலிகாமம் வலய கணக்காளருக்கு வலயக்கல்விப் பணிப்பாளரின் சாரதி சச்சிதானந்த சர்மாவால் கணக்கு கொப்பி முகத்தில் வீசப்பட்ட சம்பவமும் உண்டு. கணக்காளர் சந்திரராஜாவிடம் முறையிட்டும் - எவ்வித நடவடிக்கையும் சந்திரராஜாவால் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும், அலுவலகத்துக்கு வரும் பெண் ஆசிரியைகளை வேண்டுமென்றே தாமதிக்கவைத்து மாலையில் தனது சகாக்களை தவிர -அனைத்து பணியாளரும் சென்ற பின்னர் அலுவலகத்துக்குள் அழைத்து பாலியல் சேட்டைகள் புரிந்துள்ளார். இவற்றுக்கு இணங்காத ஆசிரியர்களை இன்று வரை பழிவாங்கிக்கொண்டிருக்கும் காமப் பொறுக்கியே சந்திரராஜா ஆவார்.

இவ்வளவு ஆதாரம் இருந்தும் - வடமாகாண கல்வியமைச்சு என்ன செய்யப்போகிறது? உண்மையில் குற்றச்சாட்டு ஒன்று வெளியாகும் பட்சத்தில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை அவசியமானதாகும். ஆனால், இப்படியான காமப் பிசாசுகளை தொடர்ந்து பெரும் பொறுப்புக்களில் விடுவது என்பது நாளை கல்விச் சமூகத்தின் எதிர்காலத்தையே படுகுழிக்குள் தள்ளி விடும். 

இப்படி பாலியல் வக்கிர புத்தி கொண்ட ஒருவனை பாடசாலை பரிசளிப்பு விழாக்கள், விளையாட்டுப் போட்டிகளுக்கு பிரதம விருந்தினராக அழைக்கும் கொடுமையை என்னவென்று சொல்ல? இப்படியானவர்கள் சிறப்பு பேச்சை மாணவர்கள் மத்தியில் பேசி அப்படி என்ன எல்லாம் விதைக்கப் போகின்றார்கள்?

இப்படியானவர்கள் சுவாசம் கூட மாணவ, மாணவியரின் மேல் பட்டு விடக் கூடாது. 

இந்த விடயத்தில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு, பாதிக்கப்பட்ட பெண்களிடம் ரகசிய விசாரணை நடாத்தி உடனடியாக சந்திரராஜா கல்விப் புலத்தில் இருந்தே உடனடியாக அகற்றப்பட வேண்டும்.     

தொடர்புடைய செய்தி: 

யாழ். வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரின் பாலியல் சேட்டைகளால் திணறும் ஆசிரியர்கள்