முதலமைச்சரின் முகம் கறுத்தது ஏன்? (Video)

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் முகத்தில் இனந்தெரியாதோர் அசிட் வீச்சு தாக்குதல் நடத்தி கண்கள் குருடாகியுள்ளனவா? என்று பலத்த சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் முற்றவெளியில் தமிழ் மக்கள் பேரவையால் 24.09.2016 சனிக்கிழமை அன்று நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியில் உரையாற்றும் போது, ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது?’ என்று முதலமைச்சர் விக்கி பகிரங்கமாக உரத்த குரலில் கேள்வி எழுப்பியிருந்தார்.  

போர்க்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து மருத்துவ மற்றும் இதர அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் வவுனியாவுக்கு வருகை தந்த குடும்பஸ்தர்களையும், இளைஞர் யுவதிகளையும் ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து இராணுவ புலனாய்வுத்துறையினருடன் இணைந்து ‘விடுதலைப்புலி உறுப்பினர்கள்’ என்று குற்றம் சுமத்தி கடத்தி காணாமல் போகச்செய்தமை,

இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசமான வவுனியாவில் வசித்து வந்த தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கு ஆதரவு நல்கிய குடும்பங்களை கடத்தி சித்தரவதை செய்து படுகொலை செய்தமை, 

சமாதான காலத்தில் வவுனியாவில் பொங்குதமிழ் ஏற்பாடுகளில் முன்னின்று உழைத்த பல்கலைக்கழக மாணவர்களை கடத்தி காணாமல் போகச்செய்தமை, 

2009 மே மாதம் இறுதி யுத்தம் முடிவடைந்து செட்டிகுளம் அகதிகள் முகாமில் மக்களோடு மக்களாக கலந்திருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களை இராணுவ புலனாய்வாளர்களுடன் சேர்ந்து காட்டிக்கொடுத்து களையெடுத்தமை, (இவற்றுக்காகவே சிறப்பு சித்திரவதை மலர் முகாமை நடத்தி வந்தமை)

இவ்வாறு தமிழ் தேசியத்துக்கு விரோதமான பலதரப்பட்ட நாசகார படுபாதக செயல்களிலும், வகைதொகையற்ற தமிழினப் படுகொலைகளிலும் ஈடுபட்டுள்ள புளொட் சித்தார்த்தனை தனக்கு அருகில் மேடையில் வைத்துக்கொண்டே, ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது?’ என்று முதலமைச்சர் விக்கி பகிரங்கமாக உரத்த குரலில் கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்தநிலையிலேயே, முதலமைச்சருக்கு என்ன நடந்தது? அவருக்கு என்ன கண்கள் குருடா? என்று அரசியல் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.