இலஞ்சம் தந்தால் மின் இணைப்பு தரப்படும். கிளிநொச்சியில் அநியாயம் (Photos)

கடந்த வாரம் கிளிநொச்சியின் மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வாழ்கின்ற ஏழை ஒருவரின் வீட்டுக்கு மின் இணைப்பு செய்ய சென்ற ஒப்பந்தகாரர்கள், 'தாங்கள் மூன்று போ் வந்திருக்கின்றோம் எங்களை கவனிக்க வேண்டும்' என்று பிடிவாதமாக நின்றுள்ளனா்.

மிகவும் வறிய நிலையில் வாழ்கின்ற அந்தக் குடும்பம் தற்போதே கடனடிப்படையில் மின்சாரத்தை பெற விண்ணப்பித்துள்ளது. ஆதலால் மின்சார சபை அதிகாரிகள் ஒப்பந்தகாரர்களிடம் மின் இணைப்பை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளனா்.

ஆனால் ஒப்பந்தகாரர்கள் குறித்த வீட்டுகார பையனிடம், 'மின்சார சபை ஆட்கள் சொன்னாலும் நாங்கள்தான் இணைப்பை வழங்குபவா்கள். எனவே எங்களை கவனிக்க வேண்டும்' என்று பிடிவாதாமாக நின்றுள்ளனா்.

ஆனால் வீட்டில் முந்நூறு ரூபாவை தவிர வேறு பணம் இல்லை. எனவே வீட்டுக்கார பையன் அயல் வீட்டுக்குச் சென்று கடன் கேட்டுள்ளான். அங்கும் பணம் இல்லை.தொடர்ந்து மற்றொரு அயல் வீட்டிற்கு சென்று ஆயிரம் ரூபாவை கடனாக வாங்கி அந்த மூன்று பேருக்கும் கொடுத்துள்ளான். 

இது இலஞ்சமில்லையாம் கவனிப்பாம். அப்ப பாருங்கோவன். (தகவல்: தமிழ்)

எங்கள் வீட்டுக்கு கரண்ட் கொழுவ வருவதாக கூறி வரவில்லை. எனவே நேரில் சென்று கதைக்கலாம் எனப்போனால் அங்கு எனக்கு தெரிந்த ஒருவரை சந்தித்தேன். அப்போ அவர் சொன்னார்... 'பெரியவரிடம் கதைத்து பூட்ட செல்லலாம். ஆனால் அவரை கவனிக்க வேண்டும். போத்தல் எடுத்து குடுக்க வேணும்' என்று ஆனால் நான் வாங்கியும் குடுக்கல இன்னும் கரண்ட் பூட்ட வரவும் இல்லை. (தகவல்: Arusan Aru)

நான் கரண்டிற்கு விண்ணப்பித்து ஒன்றரை வருடங்கள். ஒவ்வொரு மாதமும் செல்லும் போது ஒவ்வொரு சாட்டுகள். அது இல்லை... இது இல்லை... கொழும்பிலிருந்து சாமான் வரவில்லை... வர்ற சாமானும் குறைவு... என்று ஏகப்பட்ட வசனங்கள் என்ன செய்வது?

இறுதியில் கரண்ட் போஸ்ற் மரம் நட வந்தவர்கள் 'எங்களை கவனிக்கவேண்டும்' என்றார்கள். அவர்களையும் கவனித்து அனுப்பினால் இணைப்பு தரவில்லை. பின்னர் அதற்கும் அலைச்சல். ஒரு மாதிரி இணைப்பை தந்தால் கரண்டை் கனக்சன் தரவில்லை. மீளவும் அதற்கு அலைச்சல். ஒருமாதிரி ஒருகிழமையால் அதனை தந்தார்கள். 

எப்படி இருக்கிறது அதிகாரத்தில் உள்ளவர்களின் அதிகாரம். இதுதான் அரசாங்க வேலை. மக்களை கஸ்ரப்படுத்தவே. (தகவல்: Jasotharan Jaso)