யாழில் நேற்று எவ்வளவு மழை வீழ்ச்சி பதிவானது தெரியுமா?

யாழ்ப்பாணத்தில் நேற்று 74.9 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வளிமண்டலத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

வங்காளவிரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக யாழ் மாவட்டம் முழுவதும் நேற்று வியாழக்கிழமை  காற்றுடன் கூடிய கனமழை பெய்திருந்தது. 

இதில் அச்சுவேலிப்பகுதியில் 67.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், பருத்தித்துறைப்பகுதியில் 60.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், வல்லிபுரப்பகுதியில் 20.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், யாழ்நகரத்தில் 73.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. 

கிளிநொச்சியில் 46.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், ஒட்டிசுட்டானில் அதிகபட்சமாக 90.1 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.