ஆனையிறவில் இன்று காலை ரயில் மோதி இராணுவ வீரர் மரணம்

ஆனையிறவு பகுதியில் இன்று காலை ரயில் மோதி இராணுவ பொலிஸ் படைப்பிரிவு வீரர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த கடுகதிப் புகையிரதத்தில் மோதுண்டே குறித்த இராணுவ வீரர் பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் புத்தளம், ஆனமடுவ பகுதியை சோ்ந்த 42வயதான மா.நந்தசூரிய என்ற இராணுவ வீரரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இராணுவ வீரரின் சடலத்தை இராணுவ பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.

உயிரிழந்த நபர் ஆனையிறவு இராணுவ பொலிஸ் படைமுகமாமை சோ்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.