அதிக குழந்தைகளை பெற வைக்கும் முயற்சியில் சிவசேனை

இலங்கையின் வடக்கு கிழக்கில் பிறக்கும் நான்காவது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்துக் குழந்தைகளுக்கு  தமிழில் பெயர் வைத்தால், குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கும், கல்விச் செலவும் வழங்க உள்ளதாகவும் சிவசேனை அமைப்பு அறிவித்துள்ளது. 

வறுமைக் கோட்டுக்கு உள்ளே இருக்கும் குடும்பத்தில் பிறந்து வாழ்ந்து வரும் குழந்தைகளை தேர்வு செய்யும் பணியிலும் சிவசேனையின் மாவட்ட இணைப்பாளர்கள் ஈடுபட்டு உள்ளார்களாம். 

   இந்தியாவில் சிவசேனா அமைப்பு தீவிர இந்து அமைப்பாக அறியப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக தான் இந்த அமைப்பு இருக்கும் சாத்தியம் உள்ளதென பலரும் விமர்சித்து வரும் நிலையில் சிவசேனையின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.