அனலைதீவில் ஒல்லாந்தர் காலத்தின் விலை மதிப்பில்லா புதையல் கொள்ளை

யாழ்ப்பாணம் – அனலைதீவில் உள்ள வெளிச்ச வீட்ல் மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 350 ஆண்டு பழைமைவாய்ந்த விலைமதிப்பில்லாத பிளார்ரின உலோகம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக அனலைதீவு கிராம சேவகரினால் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 350 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்த ஒல்லாந்தர் தமது தடங்களை யாழ்.தீவகங்களிலும் பதித்திருந்தனர். இந்நிலையில் தமது கடல்வழிப் போக்குவரத்திற்காக தீவகங்களில் ஒன்றான அனலைதீவிலும் வெளிச்ச வீடு ஒன்றிணை அமைத்திருந்தனர்.

இவ்வெளிச்ச வீட்டினை இடி, மின்னல் தாக்காமல் இருப்பதற்கான இடிதாங்கியும் பொருத்தப்பட்டிருந்தது.

இவ்வறு பொருத்தப்பட்டிருந்த பழைய முறையிலான இடிதாங்கியினால் கடத்தப்படும் மின்னல் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக மண்ணுக்குள் பிளாற்ரின உலோகத்தினை புதைத்து வைத்திருந்தனர்.

சாதாரணமாகவே பிளாற்ரினம் விலை உயர்ந்ததாக இருந்த போதும். குhலம் செல்லச் செல்ல மின்னல் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதால் அவ்வுலொகத்தின் பெறுமதியிலும் கூடிச் செல்லும்.

இதன்படி அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த உலோகத்தினை இனந்தெரியாத நபர்கள் தோண்டி எடுத்துச் சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்களால் கிராம சேவகருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

இதன்படி சம்பவ இடத்தினை சென்று பார்வையிட்ட அப்பகுதி கிராம சேவகர் குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டள்ளனர்.

இருப்பினும் இதுவரையில் கொள்ளையர்கள் கைது செய்யப்படவில்லை என்றும், கொள்ளையடிக்கப்பட்ட உலோகம் கடல்வழியாக வேறு பகுதிகளுக்கு கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.