புயல் தாக்கும் அபாயம்: தொடர் கன மழைக்கு வாய்ப்பு

இலங்கையில் புயல் தாக்கும் அபாயமும், பெரும் மழை தொடர்ச்சியாக பெய்யும் வாய்ப்பும் காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 720 கிலோ மீட்டர் தொலைவில் வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி மையம் கொண்டுள்ளது. 

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இவ்வாறு மாறி வடமேற்கு திசையை நோக்கு நகரும். இது அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறி 2 ஆம் திகதி கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதனால் இன்று இரவு முதல் லேசானது முதல் மிதமான மழையும், நாளை மற்றும் நாளை மறுநாள் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நாளை முதல் கடும் காற்று வீசும் அபாயம் காணப்படுவதனால் மீனவர்கள் தொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.