பருத்தித்துறை பஸ்ஸில் மயங்கி விழுந்த இளம்பெண்

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேரூந்தில் நேற்றுக் காலை பயணித்த பெண்ணொருவர் கோப்பாய் சந்திக்கு அருகாமையில் மயங்கி விழுந்துள்ளதாக தெரியவருகிறது. 

உடனடியாக அருகில் நின்றவர்கள் தண்ணீர் தெளித்து அப்பெண் மயக்கம் தெளிய உதவியுள்ளனர். 

சமீப காலமாக பஸ்களில் குறிப்பாக பெண்கள் மயக்கமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிய வருகிறது. 

குறிப்பாக தெல்லிப்பளை, வயாவிளான், பருத்தித்துறை, தீவகம் போன்ற தூரப் பிரதேசங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வேலைக்கு வரும் பெண்களில் அனேகமானோர் காலைச் சாப்பாட்டை சாப்பிடாமல் வருவதாலும், பஸ்ஸில் இடநெருக்கடி காரணமாக பல நேரங்களில் நின்று கூட போக முடியாத பயங்கர நெருக்கடி நிலை காணப்படுவதனாலும் மயக்க நிலை ஏற்படுவதாக அறிய வருகிறது. 

பஸ் இடநெருக்கடியைக் குறைக்க அதிகளவு பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதே உரிய பலனைத் தரும்.