தேவானந்தாவுக்கும் காஸ்ரோவுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா?

நவம்பர் 26இல் லண்டன் தமிழ் சங்கத்தில் இடம்பெற்ற சந்திப்பில் அன்றைய தினம் மறைந்த கியூபா புரட்சியின் நாயகன் பிடல் கஸ்ரோவிற்கு ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இச்சந்திப்பை தமிழ் மொழிகளின் செயற்பாட்டகம் ஏற்பாடு செய்திருந்தது.

பெரும்பாலும் இடதுசாரி கருத்தியலாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் கடல் கடந்து வெகுதொhலைவில் கியூபா இருந்த போதும் தமிழ் இடதுசாரிச் சிந்தனையாளர்களுக்கு கஸ்ரோ மீது ஒரு காதல் எப்போதும் இருந்தது. சிலர் கியூபாவுக்கு பயணித்து தங்கள் காதலை வெளிப்படுத்தியும் இருந்தனர்.

ஒரு முறை தோழர் டக்ளஸ் தேவானந்தாவை பேட்டி கண்ட போது அவரிடம் அவரது தாடியைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர் தோழர் பிடல் கஸ்ரோ போன்று ஒரு புரட்சியாளனாக இருக்க விரும்பினேன். 

இப்போது குறைந்தபட்சம் அவரைப் போல் தாடியையாவது வைத்திருக்கிறேன் நகைச்சுவையுடன் தெரிவித்தார்.

பிடல் கஸ்ரோவுக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையே இன்னுமொரு ஒற்றுமையும் உண்டு. இருவருமே பல படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பியவர்கள். 

பிடல் கஸ்ரோ அறுநூறுக்கும் மேற்பட்ட சிஐஏ இன் படுகொலைகளில் இருந்து தப்பினார். டக்ளஸ் தேவானந்தா புலிகளின் 13 படுகொலை முயற்சிகளில் இருந்து உயிர் தப்பினார்.

நன்றி: ஜெயபாலன்-