சுமந்திரனின் மென்வலுவா மாவீரர் நினைவு கூரல்?

சம்மந்தன், சுமந்திரன் ஆகியோருடைய வழியில் பல சாத்தியக் கோடுகள் துலக்கப்பட்டுள்ளன. அவற்றின் வெளிப்பாடுகளே முள்ளிவாய்க்கால் நினைவு கூரல், படையினர் துயிலுமில்லங்களில் இருந்து வெளியேறியமை, மாவீர்நாள் கொண்டாட்டம் என்று தமிழ் மக்கள் உணரும் வகையில் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. 

புதிய ஆட்சியை உருவாக்குவதற்கான தீர்மானத்தை எடுத்ததில் இருந்து மாவீர் நாள் கொண்டாட்டத்தைச் செய்வதற்கான சூழலை உருவாக்கியது வரையில் சம்மந்தன் மேற்கொண்ட நெகழ்ச்சியான அணுகுமுறைகளே இவற்றையெல்லாம் சாத்தியப்படுத்தியுள்ளன என்று சுமந்திரன் இனி நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கூறுவார். 

சம்மந்தனுக்கும் சுமந்திரனுக்கும் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் இது அவசியமான ஒன்று.

“அரசாங்கத்துடன் இணைந்திருந்து கொண்டு என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களும் கிடைத்து விட்டன. 

இப்பொழுது சம்மந்தனும் சுமந்திரனும் காலாட்டிக்கொண்டு, கோப்பி குடிப்பார்கள். சுமந்திரனை நோக்கிய கேள்விகளுக்கெல்லாம் தற்போது ஒரு தடுப்பரண் உண்டாக்கப்பட்டுள்ளது.

”பொறுத்திருங்கள், இதைப்போல நீங்கள் நம்ப முடியாத பல விசயங்களை நாங்கள் நடத்திக் காண்பிப்போம்“ என்று இரண்டு பத்திரிகையாளர்களிடம் சுமந்திரன் அண்மையில் சொன்னது இவற்றையெல்லாம் மனதில் வைத்தாக இருக்கலாம்.

“சிறிதரனோ சிவாஜிலிங்கமோ விளக்கேற்றுவது முக்கியமல்ல, அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுத்த எங்களுடைய பணிகள்தான் முக்கியமானது“ என்று சுமந்திரன் ஆதரவாளர்களிடம் கூறியிருப்பதையும் இங்கே குறிப்பிடலாம். இதை மறுக்கவும் முடியாது.

நன்றி: கருணாகரன்-