மீண்டும் இனவாதக் கூச்சலிடும் மஹிந்த தரப்பு (Photos)

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட எழுகத்தமிழ் பேரணியைத் தொடர்ந்து, நேற்றைய தினம் தமிழர் தாயகப் பகுதியில் உள்ள துயிலுமில்லங்களில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. 

போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், சுமார் 8 ஆண்டுகளின் பிற்பாடு பேரெழுச்சியுடன் தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு விழிநீர் பெருக அஞ்சலி செலுத்தினர்.

மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றதனை அறிந்த மஹிந்த ஆதரவாளர்கள் இனவாதக் கூச்சலிட்டு சமூக வலைத்தளங்களில் இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் மீம்ஸ்களை உருவாக்கி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

இவ்வளவு நாளும் தேர்தல் தோல்வியில் சோர்ந்து  படுத்துக் கிடந்த மஹிந்த பேரினவாதக் கூச்சலுடன் மீண்டும் கூக்குரலிட்டு வருகிறார்.

அவற்றில் சிலவற்றை நீங்களும் பாருங்களேன்,    

சிங்கள மொழியை வாசிக்கக் கூடியவர்கள் முடிந்தால் கீழே உள்ள பேஸ்புக் போஸ்டர்களில் உள்ள சிங்கள வாசகங்களை தமிழுக்கு மொழிபெயர்த்து கீழே கொமண்டில் பதிவிடவும்.