மனைவியைக் காணவில்லை: இலங்கைத் தமிழ் அகதி பொலிஸில் புகார்

மனைவியைக் காணவில்லை என இலங்கை அகதி ஒருவர் தமிழ்நாடு பொலிசில் புகார் செய்துள்ளார். 

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தின்  குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் வெள்ளியம் மகன் பூவிந்திரன் (32), இவர் கூலித் தொழிலாளி. 

இவரது மனைவி ஷாலினி (30). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து, இரண்டு குழந்தைகள் உள்ளது. 

கடந்த 19ம் திகதி இரவு வீட்டை விட்டுச் சென்ற ஷாலினி, வீடு திரும்பவில்லை. 

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பூவிந்திரன் கொடுத்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி பொலிசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.