ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்

இந்நாள் அந்த நேரத்தை நெருங்க நெருங்க மனப்பாரம் அதிகரிப்பதை உணர்கிறேன்.

அது பாரமல்ல; துயர்

துயரல்ல; பல நூற்றாண்டுகள் அடங்கிய வலி.

அது வலியல்ல; எல்லாம் இழந்தவனின் ஏக்கம்.

அது ஏக்கமுமல்ல; இயக்க அண்ணாக்கள் விட்டுச் சென்ற நினைவுக் காயங்களின் நொதிப்பு.

இல்லை இல்லை

அது நொதிப்புமல்ல; மனக்கொதிப்புமல்ல.

எல்லாம் கடந்த ஏதோ ஒன்று. ஏதோவொன்று.

ஓ வென வெடித்து அழவேண்டும் போலிருக்கிறது. ஆனால்

நீங்கள் விதையுண்ட நிலத்தில்

கண்ணீர் துளியளவும் விழுவதாயில்லை.

மொத்த உணர்வையிம் பாறையாய் இறுக்கி 

வைராக்கியம் கொள்கிறேன்.

அந்த கரும்பாறை வைராக்கியத்தை 

மெல்லிதாக வருடுகிறது

நீவீர் விட்டுப்போன இறுதியிசை

" ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்"

நன்றி: ஜெரா