தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவேந்தல் அனுட்டிப்பு (Photos)

தமிழின விடுதலைக்காக இறுதிவரை போராடி வீழ்ந்த மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வு இன்று மாலை தாயகத்தின் பல பிரதேசங்களில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. 

யாழ்ப்பாணத்தில் நல்லூரிலும், கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல முன்றலிலும், வல்வெட்டித்துறையில் புலிகளின் முதல் மாவீரர் சங்கரின் நினைவிடத்தில்  சிவாஜிலிங்கம் ஒருங்கிணைப்பிலும், யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஒருங்கிணைப்பில், சாட்டியில் சரவணபவன் எம்.பி ஒருங்கிணைப்பிலும், வடமராட்சி கிழக்கு உடுத்துறையில்  ஜனநாயக போராளிகள் கட்சி ஏற்பாட்டிலும், யாழ். கந்தர்மடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கொருங்கிணைப்பிலும்,  கிளிநொச்சி - கனகபுரம் மற்றும் முழங்காவில் துயிலுமில்லங்களில் மாவை சேனாதிராஜா, சிறிதரன் எம்.பி ஒருங்கிணைப்பிலும், முல்லைத்தீவு வன்னிவிழாங்குளம் மாவீர் துயிலும் இல்லத்தில் சாந்தி எம்.பி ஒருங்கிணைப்பிலும், வவுனியா பொங்குதமிழ் நினைவு முன்றலில் வவுனியா பிரஜைகள் குழு ஏற்பாட்டிலும், 

மன்னார் – பண்டிவிரிச்சான் துயிலுமில்லத்தில் பொதுமக்கள் ஏற்பாட்டிலும் மாவீரர் நினைவு நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் இடம்பெற்றன. 

இந்த அஞ்சலி நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு உயிர்நீத்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இராணுவத்தினரால் சிதைக்கப்பட்ட துயிலுமில்லங்கள் பொதுமக்களால் சில நாட்களில் சீரமைக்கப்பட்டு  சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர் பாடல்கள் ஒலிக்க விடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளன. 

மாவீரரின் உறவுகள், பொதுமக்களின் கதறல்களால் தாயகமே அதிர்ந்துள்ளது.  

முழங்காவில் துயிலுமில்லத்தில்...

முழங்காவில் துயிலுமில்லத்தில்...

வல்வெட்டித்துறையில் புலிகளின் முதல் மாவீரர் சங்கரின் நினைவிடத்தில்...

வல்வெட்டித்துறையில் புலிகளின் முதல் மாவீரர் சங்கரின் நினைவிடத்தில்...

யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில்...

யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில்...

மன்னார் – பண்டிவிரிச்சான் துயிலுமில்லத்தில்..

மன்னார் – பண்டிவிரிச்சான் துயிலுமில்லத்தில்..

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில்

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில்

யாழ் பல்கலைக்கழகத்தில்...

யாழ் பல்கலைக்கழகத்தில்...

யாழில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில்...

யாழில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில்...

யாழ்ப்பாணம் சாட்டி துயிலுமில்லத்தில்...

யாழ்ப்பாணம் சாட்டி துயிலுமில்லத்தில்...

மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி அலுவலகத்தில்..

மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி அலுவலகத்தில்..

வன்னிவிழாங்குளம் மாவீர் துயிலும் இல்லத்தில்...

வன்னிவிழாங்குளம் மாவீர் துயிலும் இல்லத்தில்...

நல்லூர் கந்தசுவாமி கோவில் வளாகத்தில்....

நல்லூர் கந்தசுவாமி கோவில் வளாகத்தில்....

யாழ். உடுத்துறையில் ஜனநாயக போராளிகள் கட்சி ஏற்பாட்டில்...

யாழ். உடுத்துறையில் ஜனநாயக போராளிகள் கட்சி ஏற்பாட்டில்...