போர்க் காலங்களைப் போல் யாழ் வீதிகளில் விரையும் விசேட அதிரடிப் படையினர்

இன்று தமிழர் வாழும் பிரதேசமெங்கும் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. நாளைய தினம் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற உள்ளன. 

இதனால் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமெங்கும் இராணுவம், பொலிஸாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பல பிரதேசங்களில் போர் இடம்பெற்ற காலங்களைப் போன்று மோட்டார் சைக்கிள்களில் விசேட அதிரடிப் படையினர் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவர்களின் திடீர் பிரசன்னங்கள் மக்கள் மத்தியில் ஒருவித பதற்ற நிலையை தோற்றுவித்துள்ளது. 

பிரபாகரனின் பிறந்த தினம், மாவீரர் தினம் என்பவற்றை தடுக்கும் நோக்கில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.