இருக்கிறான் என்றாலும் இல்லை தான் என்றாலும் இருக்கும் அவன் மீதொரு பயமும் பக்தியும்

இன்று தமிழீழ தேசியத் தலைவரின் 52 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் கொண்டாடப்பட்டு வருகின்றன. 

தமிழ் மக்களின் உரிமைக்கான தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒரு முக்கியமான கால கட்டத்தில், பல்வேறு விமர்சனங்களுக்கும் அப்பால் 30 வருடங்களுக்கும் மேலாக நகர்த்திய பெருமை பிரபாகரனையே சாரும். 

தமிழினத்தில் பிறந்து விலை போகாத தன்மை, உறுதியான கொள்கை, எதிரியே மெச்சும் பண்பு, கொள்கைப் பிடிப்புள்ள தலைமைப் பண்பு ஆகியவற்றை தன்னகத்தே கொண்டு தமிழ் மக்களின் இன விடுதலைப் போருக்காக கடைசி வரை தன்னையே அர்ப்பணித்தவர். 

இன்று தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் வரை நகர்த்திய பெருமை இவரையே சாரும்...

இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்... 

தமிழ்நாட்டு கவிஞர் பா. விஜய் இன் பிரபாகரன் குறித்த கவிதை ஒன்றில் இப்படி ஒரு வரி வரும், 

அவன் கடவுள் மாதிரி: இருக்கிறான் என்றாலும் இல்லை தான் என்றாலும் இருக்கும் அவன் மீதொரு பயமும் பக்தியும்...