முழங்காவில் மாவீரர் துயிலுமில்லக் காணியையும் துப்பரவு செய்த பொதுமக்கள் (Photos)

கிளிநொச்சி பூநகாி முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் காணியிலும் இன்று வெள்ளிக்கிழமை  சிரமதானம் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை தொடக்கம் பிற்பகல் வரை இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மாவீரா் துயிலுமில்லக் காணியும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து சில மாதங்களுக்கு முன் விடுவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் அங்கும்  கல்லறைகள் மட்டும் நினைவுக் கல் என்பன இராணுவத்தினரால் இடித்து ஒதுக்கப்பட்டிருந்தது.

தற்போது மக்கள் மிகவும் ஆா்வத்துடன் உணா்வுபூா்வமாக கலந்துகொண்டு சிரமதானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். காலையில் சிலரே கலந்துகொண்ட போதும்  அவா்களை பாா்த்து பின்னா் படிப்படியாக மக்கள் ஆா்வத்துடன் தாங்களாகவே முன்வந்து சிரமதானப் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

எட்டு வருடங்களின் பின்  துயிலுமில்லம் காணிக்குள் கால் வைத்தமை தங்களுக்கு உணா்வுபூா்வமான விடயமாக உள்ளதாக கலந்து கொண்டவா்கள் கருத்து தெரிவித்தனா். அத்தோடு கல்லறைகள் மட்டும் நினைவுக்கல் இல்லாத போதும் தங்களின் பிள்ளைகள் புதைக்கப்பட்ட இடத்தில் நிற்பது ஆத்ம திருப்பதியை அளிப்பதாகவும் அவா்கள் மேலும் குறிப்பிட்டனா்.