கூட்டமைப்பின் குடை பிடி கலாசாரம் (Photos)

இதோ இரண்டு வல்லரசு நாடுகளின் தலைவர்கள் தமது கையால் தமக்கு குடை பிடிக்கிறார்கள்.

ஆனால் எமது தலைவர்களோ தமக்கு குடை பிடிக்கவும்கூட இன்னொருவரை வைத்திருக்கின்றனர்.

இது குறித்து இவர்களுக்கு வெட்கம் இல்லை. சொல்லப்போனால் பெருமையாக அல்லவா நினைக்கிறார்கள்.

வீதியில் வந்த மாணவர்கள் சுடப்படுகிறார்கள். மாணவர்களின் பாதுகாப்பை பற்றி பேசவேண்டிய எமது தலைவர்கள் சம்பந்தர் அய்யாவுக்கு கொடுத்துள்ள பாதுகாப்பு போதாது? என்று பாராளுமன்றத்தில் பேசுகிறார்கள்.

சம்பந்தர் அய்யா தமிழ் மக்களின் தலைவர்தானே. அவர் தமிழ் மக்கள் மத்தியில் வருவதற்கு எதற்கு சிங்கள பொலிசாரின் பாதுகாப்பு?

சிங்களப் பொலிசாரின் பாதுகாப்பை வைத்திருப்பதும் அல்லாமல் கொஞ்சம்கூட வெட்கம் இன்றி அதனை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றும் அல்லவா கேட்கிறார்கள்.

இவர்களுக்கு மாத சம்பளம் மற்றும் சலுகைகள் இரண்டு லட்சம் ரூபா. இவர்கள் திரிவதற்கு 8 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம். போதாக் குறைக்கு இவர்களுக்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு.

இத்தனை கொடுத்தும்கூட இவர்கள் குடும்பத்துடன் வாழ்வது இந்தியாவில். ஏன் இவர்களால் வாக்கு பெற்ற மக்கள் மத்தியில் வாழ முடியவில்லை?

இவர்களை தேடிச் சென்று முறையிட்டால் கண்ணை மூடிக் கொண்டு நித்திரையில் இருப்பது, அல்லது திறப்பு என் கையில் இல்லை என்று கிண்டலாக பதில் சொல்வது.

இந்த கொடுமைகளுக்கு என்னதான் முடிவு? இன்னும் எத்தனை நாட்களுக்கு இவர்களை நாம் சகித்தக் கொள்வது?

நன்றி: நிஷாந்தன்